முதல்வர் மு.க.ஸ்டாலினை பற்றி பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு யோகிதை இல்லை.! கோவை செல்வராஜ் ஆவேசம்.!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் ஆட்சியை குறை கூறுவகற்கு, நகர்ந்து ஊர்ந்து முதல்வர் பதவியில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி விமர்சிக்க எந்த யோகிதையும் கிடையாது. – கோவை செல்வராஜ் விமர்சனம்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகிய கோவை செல்வராஜ் தனது ஆதரவாளர்களுடன் இன்று திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து, அவர் முன்னிலையில் கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்தார்.
திமுகவில் இணைந்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ பெண்களுக்கு இலவச மாநகர பேருந்து வசதி மூலம் தினமும் 60 முதல் 70 ரூபாய் வரையில் மிச்சமாகி இருக்கிறது. மாதம் 2000 ரூபாய் வரையில் சேமிக்கிறார்கள் . இதன் மூலம் பெண்களின் ஆதரவு எப்போதும் திமுகவுக்கு உண்டு.
தொழில்துறைகளில் எந்த ஒரு அரசியல் தலையிடு இல்லாமல் தொழில்கள் நடைபெறுகிறது. தமிழக மின்சாரத்துறை தடையில்லா மின்சாரம் வழங்கி வருகிறது . அதிமுக ஆட்சியில் 10 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவசம் மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால், இன்றய தினம் திமுக ஆட்சியில் 1.5 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குகிறார்கள். இது பாராட்டக்கூடிய விஷயமாகும்.
படிக்கும் பெண் குழந்தைகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் வரவேற்க தக்கது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் ஆட்சியை குறை கூறுவகற்கு, நகர்ந்து ஊர்ந்து முதல்வர் பதவியில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி விமர்சிக்க எந்த யோகிதையும் கிடையாது. அதிமுக கட்சி தற்போது கம்பெனியாக செயல்படுகிறது. என தனது விமர்சனங்களையும், திமுக ஆட்சி மீதான பாராட்டுகளையும் கோவை செல்வராஜ் முன்வைத்தார்.
மேலும், கோவை மாவட்டத்தில் தனது ஆதரவாளர்கள் 5 ஆயிரம் பேரும் விரைவில் திமுகவில் இணைவார்கள் என திமுகவில் இணைந்த கோவை செல்வராஜ் பேட்டியளித்தார்.