கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்ததால் எந்த பாதிப்பும் இல்லை – ஐயப்பன்
சுயநலத்திற்காக கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்துள்ளார் என ஐயப்பன் பேட்டி.
ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த கோவை செல்வராஜ் நேற்று கட்சியில் இருந்து விலகிய நிலையில், இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன் கூறுகையில், அதிமுகவை மீட்கும் முயற்சியில் ஓபிஎஸ் போராடி வரும் நிலையில், சுயநலத்திற்காக கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்துள்ளார். ஓபிஎஸ் அணிக்கு எந்த பாதிப்பும் இல்லை.
கோவை செல்வராஜுக்கு தலைமை நிலைய செயலாளர் பதவி வழங்குவது தொடர்பாக ஓபிஎஸ் ஆலோசனை செய்த நிலையில், அவர் இன்று திமுகவில் இணைந்துள்ளார் என தெரிவித்துள்ளார்.