கோவை கொலை – இருவரை சுட்டுப்பிடித்தது போலீஸ்!
கோவை நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடந்த கொலை சம்பவம் தொடர்பாக தலைமறைவாக இருந்த இருவரை சுட்டு பிடித்தது காவல்துறை.
கோவை நீதிமன்ற வளாகம் அருகே கோகுல் என்பவரை கொலை செய்த வழக்கில் தேடப்பட்ட 2 பேரை துப்பாக்கியால் சுட்டு கைது செய்தது காவல்துறை. இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 7 பேரை அழைத்து வந்தபோது, மேட்டுப்பாளையம் அருகே 2 பேர் தப்பிக்க முயற்சி செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
எனவே, தப்பிக்க முயன்ற 2 பேரை காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தது தனிப்படை போலீஸ். ஜோஸ்வா, கவுதம் ஆகியோர் தப்பி ஓடும்போது தனிப்படை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்த 2 பேரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.