கோயம்பேடு சந்தை திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.!

Default Image

செப்.28-ஆம் தேதி கோயம்பேடு சந்தை திறக்கப்படுவதையொட்டி வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டது தமிழக அரசு.

கொரோனா எதிரொலியால் மூடப்பட்ட கோயம்பேடு மார்க்கெட் செப்டம்பர் 28 ஆம் தேதி திறக்கப்படவுள்ள நிலையில் கடைகளை சீரமைக்கும் பணியில் வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கோயம்பேடு சந்தை திறக்கப்படுவதையொட்டி வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

  • மொத்த காய்கறி சந்தையில் சரக்கு வாகனங்கள் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை அனுமதிக்கப்படும்.
  • வாடிக்கையாளர்களின் வாகனங்கள் அதிகாலை முதல் காலை 9 மணி வரை அனுமதிக்கப்படும்.
  • கோயம்பேடு வணிக வளாகத்தில் மக்கள் நடமாட்டம், வாகனப் போக்குவரத்து சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படும்.
  • வழிகாட்டுதலை கடைபிடிக்காதது கண்டறியப்பட்டால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
  • தனிநபர் கொள்முதல் மற்றும் சில்லறை வணிகத்திற்கு முற்றிலுமாக தடை என்று தெரிவித்துள்ளது.
  • சாலையோர விற்பனை மற்றும் சந்தைக்குள் பொது இடங்களை ஆக்கிரமித்து வியாபாரம் செய்வது முற்றிலும் தடை.
  • சந்தைக்கு வரும் அனைத்து வாடிக்கையாளர்களும் உடல் வெப்ப சோதனைக்கு பின்னரே அனுமதி அளிக்கப்படும்.
  • அனைத்து வாகனங்களும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படும் என்று சி.எம்.டி.ஏ (Chennai Metropolitan Development Authority) தெரிவித்துள்ளது.
  • கோயம்பேடு காய்கறி சந்தை உரிமையாளர்கள், பணியாளர்கள் வாரத்தில் ஒருநாள் அங்காடிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, சுத்தம் செய்தல், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளலாம்.
  • இதனிடையே, கோயம்பேடு காய்கறி அங்காடி திறப்பதற்கான ஆயத்த பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் நேரில் சென்று ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்