கோவை: இளைஞர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது!
கோவை நீதிமன்றம் வளாகம் அருகே நடந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை கைது செய்தது காவல்துறை.
கோவை நீதிமன்றம் வளாகம் அருகே கோகுல் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி பார்த்தசாரதி என்பவர் கைது செய்யப்பட்டார். கோவை நீதிமன்றம் வளாகம் அருகே கடந்த சில வாரங்களுக்கு முன் இளைஞர் கோகுல் கொலை செய்யப்பட்டார். இளைஞர் கோகுல் கொலை வழக்கில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளி தற்போது கைது செய்யப்பட்டார்.
கோகுல் கொலை வழக்கில் தூத்துக்குடியை சேர்ந்த பார்த்தசாரதி தலைமறைவாகி இருந்தார். தலைமறைவாக இருந்த பார்த்தசாரதியை தனிப்படை போலீசார் கைது செய்ய முயன்றபோது தப்பிக்க முயன்றுள்ளார். தப்ப முயன்றதில் கீழே விழுந்த பார்த்தசாரதிக்கு காலில் முறிவு ஏற்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.