கோவையில் ரிமோட் மூலம் சிக்னலை கட்டுப்படுத்தும் திட்டம் அறிமுகம்…!
கோவையில் ரிமோட் மூலம் சிக்னலை கட்டுப்படுத்தும் திட்டம் அறிமுகம்.
பொதுவாக சாலையில் வாகன ஓட்டிகள் சீராக செல்வதற்கு சிக்னல் மிகவும் அவசியமான ஒன்றாகும். அதுமட்டுமல்லாமல், இந்த சிக்னலுக்கு அருகே நின்று போக்குவரத்து காவல் அதிகாரிகளும் வாகன ஓட்டிகளை நெறிப்படுத்துவதுண்டு.
அந்த வகையில், கோவையில், சோதனை முயற்சியாக போக்குவரத்து காவல்துறையினர் ரிமோட் மூலம், சிக்னலை இயக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவிநாசி, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, மருதமலை சாலை மற்றும் திருச்சி சாலை என 52 இடங்களில் சிக்கனல்கள் உள்ளன.
இதனையடுத்து, 5 ஆண்டுகளுக்கு முன் சிக்னல்களை தன்னிச்சையாக இயக்கம் திட்டம் அமலுக்கு வந்தது. அதில் உள்ள சிக்கல்களை தவிர்க்கும் வகையில், சாலையில் அங்கும், இங்கும் நடந்தபடி சிக்னல்களை இயக்கம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.