கோவை நகைக்கடை கொள்ளை வழக்கில்.. 3 கிலோ நகைகள் பறிமுதல்..!
கோவை காந்திபுரத்தில், 100 அடி சாலையில் அமைந்துள்ள பிரபல நகைக்கடையில் கடந்த 27-ஆம் தேதி இரவு கொள்ளை சம்பவம் நடைபெற்றது. கோவையில் மிகவும் பரபரப்பாக இயங்கி வரும் இந்த சாலையில் பல்வேறு பிரபலமான பெரிய கடைகள் முதல் பல்வேறு சிறிய கடைகள் வரையில் இயங்கி வருகின்றன.
எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இந்த பகுதியில் இயங்கி வரும் நகைக்கடையில் இந்த கொள்ளை சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொள்ளையை மர்ம கும்பல் நகைக்கடை சுவற்றை துளையிட்டு இந்த கொள்ளை சமபவத்தை நிகழ்த்தியுள்ளனர். இது தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சம்பவம் தொடா்பாக காவல்துறை வழக்குப் பதிவு செய்து 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பது தெரியவந்தது. இதற்கிடையில் கோவை நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்படும் விஜய் மனைவி நர்மதா கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 3 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.