சென்னைக்கு அடுத்து பெரிய தொழில் நகரமாக கோவை உள்ளது-முதலமைச்சர் பழனிசாமி
கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவையில் அமைய உள்ள கொடிசியா தொழிற்பூங்காவிற்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.பின் முதலமைச்சர் பழனிசாமி கூறுகையில், தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து பெரிய தொழில் நகரமாக கோவை உள்ளது.கோவையில் மெட்ரோ ரயில் பணிகள் ஆரம்பக் கட்டத்தில் உள்ளது, ஒரு வருடத்திற்குள் திட்டம் செயல்படுத்தப்படும்.கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.