மருத்துவ சிகிச்சைக்கு பணமில்லை! அரளிவிதையை அரைத்து தனது 4 குழந்தைகளுக்கும் கொடுத்த தாய்!

Default Image
  • கோவை பீளமேடு பகுதியில் தனது 4 குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர் கோவிந்தராஜ்  – அம்சவேணி தம்பதியினர். 
  • ஒரு குழந்தைக்கு சிகிச்சை செய்ய பணமின்றி அரளிவிதை அரைத்து அனைத்து குழந்தைகளுக்கும் கொடுத்து விட்டார் தாய் அம்சவேணி. 

கோயம்புத்தூர் பீளமேடு பகுதியில் வசித்து வருகிறார் கோவிந்தராஜ். இவரது மனைவி பெயர் அம்சவேணி. இந்த தம்பதிக்கு சௌமியா, சத்யப்ரியா, மணிகண்டன், சபரிநாதன் என 4 அக்குழந்தைகள் உள்ளனர்.

இதில் சத்ய பிரியாவுக்கு நுரையீரல் பிரச்சனை எழுந்துள்ளது. இவருக்கு மருத்துவம் பார்க்க அதிக செலவாகியுள்ளது. ஆனால் அவர்களிடம் போதிய நிதிவசதி இல்லை. அதனால், கோவிந்தராஜ் வேலைக்கு சென்ற நேரம் பார்த்து, அம்சவேணி, தனது 4 குழந்தைகளுக்கும் அரளி விதை கொடுத்துள்ளார்.

பின்னர் மனம் மாறிய அவர் தனது நான்கு குழந்தைகளையும் மருத்துவமனை கூட்டி சென்றுள்ளார். தற்போது அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்