கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தை மூட வைத்த கொரோனா.!
கோவை மாவட்டம் குனியமுத்தூர் எனும் ஊரில் உள்ள காவல் நிலையத்தில் காவலர் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தனை தொடர்ந்து குனியமுத்தூர் காவல்நிலையம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்டுள்ள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டால் அவர் வசித்த பகுதி, வேலைக்கு சென்ற பகுதி சீல் வைக்கப்பட்டு வெளியாட்கள் யாரும் உள்ளே விடாமலும், அங்கிருப்பவர்களை வெளியில் அனுப்பாமலும் அவர் பழகிய அனைவர்க்கும் கொரோனா பரிசோதனையும் செய்யப்படும்.
அந்தளவிற்கு கொரோனா தொற்றுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டம் குனியமுத்தூர் எனும் ஊரில் உள்ள காவல் நிலையத்தில் காவலர் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து குனியமுத்தூர் காவல்நிலையம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்டுள்ள்ளது. அந்த காவல்நிலையம் அப்பகுதியில் உள்ள மண்டபத்தில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.