கோவை குற்றாலத்திற்கு பயணிகள் வர தடை நீட்டிப்பு..!
கோவை குற்றாலத்துக்கு சுற்றுலா பயணிகள் வர தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக கோவை குற்றாலம் தொடர்ந்து மூடப்பட்டு இருந்தது. அதன் பின் கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து சமூக இடைவெளியுடன் ஒரு மணி நேரத்திற்கு 40 பேர் அனுமதிக்கப்பட்டனர். மேற்குத்தொடர்ச்சி மலை தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகமாக வந்ததால் கடந்த 5 ம் தேதி முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்தது.
இந்நிலையில், கோவை குற்றாலத்துக்கு சுற்றுலா பயணிகள் வர தடை நீட்டிப்பு என வனத்துறையினர் அறிவித்துள்ளது. தொடர் மழையால் கோவை குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு பெய்த மழையால் கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.