சவுக்கு சங்கருக்கு ஒருநாள் காவல்.! கோவை நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : யூ-டியூபர் சவுக்கு சங்கரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெண் காவலர்களை அவதூறாக பேசியாக கூறி யூ-டியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 4ஆம் தேதி தேனியில் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் தேனியில் இருந்து கோவைக்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.
பின்னர், நீதிமன்ற காவலில் இருக்கும் சவுக்கு சங்கரை வழக்கு விசாரணைக்காக 5 நாட்கள் விசாரிக்க வேண்டும் என கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் கோவை சைபைர் கிரைம் போலீசார் கோரிக்கை வைத்து இருந்தனர். இந்நிலையில் இன்று கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சவுக்கு சங்கரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
விசாரணை முடிந்து மீண்டும், நாளை மாலை சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025