கோவை கார் வெடி விபத்து.! 900 பேரின் விவரங்கள் சேகரிப்பு.!
கோவை கார் வெடி விபத்து சம்பவத்தை அடுத்து அரசியல் தொடர்பாக இருப்பவர்கள், இஸ்லாமிய இயக்கத்தில் இருப்பவர்கள் என கிட்டத்தட்ட 900 பேரின் விவரங்கள் போலிசாரால் சேகரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
கோவையில் கடந்த மாதம் 23ஆம் தேதி உக்கடம் அருகே காரில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் ஜமேஷ் முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை செய்ததில் முபின் வீட்டில் 76 கிலோ வேதிப்பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து முபினுக்கு உதவியதாக 6 பேர் போலீசார் விசரணையில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கின்றனர். மேலும் தமிழகம் முழுவதும் அவ்வப்போது பல்வேறு இடஙக்ளில் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், அரசியல் தொடர்பாக இருப்பவர்கள், இஸ்லாமிய இயக்கத்தில் இருப்பவர்கள் என கிட்டத்தட்ட 900 பேரின் விவரங்கள் போலிசாரால் சேகரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
அவர்களின் பெயர், குடும்ப விவரம், தொழில், வருமானம், வங்கி கணக்கு ஆரம்பித்து சமூக வலைத்தள பக்கங்கள் வரையில் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.