கோவை கார் வெடிவிபத்தில் உயிரிழந்த ஜமேசா முபின் உடன் ,தொடர்பில் இருந்ததாக, ஜமேசா முபின் நண்பர்கள் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஞாயிற்று கிழமை அன்று அதிகாலை கோட்டைமேடு பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த கார் விபத்து ஏற்பட்ட இடத்திலும், ஜமேசா முபின் வீட்டிலும் வெடிகுண்டு சம்பந்தமான பொருட்கள் இருந்தது போலீசார் சோதனையில் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து அவர் ஏதேனும் நாச வேலைகள் செய்யும் முனைப்பில் திட்டம் போட்டிருந்தாரா என்ற கோணத்திலும், அவருடன் சம்பந்தப்பட்டவர்கள் யார் யார் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இதில், சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் ஜமேசா முபினுடன் இருந்த ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவர்கள் முகம்மது தல்கா, முஹம்மது அசாருதீன், முகமது ரியாஸ், பரோஸ் இஸ்மாயில், முஹம்மது நவாஸ் இஸ்மாயில் ஆகியோர் என தகவல்கள் கசிந்து வருகிறது. இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அத்தொகுதிக்கு இன்று…
நேபாளம்: நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று (ஜன,7) நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணியளவில், நேபாள், திபெத் எல்லையில் 7.1 ரிக்டர்…
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிவேகமாக வந்த…
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இவிகேஎஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து…
சென்னை :இட்லி தோசைக்கு ஏற்ற பூண்டு பொடி தயார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தேவையான…