டாஸ்மாக் வேண்டாம்… கள் குடிக்கலாம்.! அண்ணாமலையின் புதிய வாக்குறுதி.!
Election2024 : டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். கள் கடைகளை திறக்க வேண்டும் என அண்ணாமலை பிரச்சாரம் செய்தார் .
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் இன்னும் மூன்று வாரத்தில் வர உள்ளதால், மக்களவை தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. தங்கள் கட்சி வாக்குறுதிகளை கூறுவது போல பிற கட்சிகளையும் சரமாரியாக அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து தங்கள் பிரச்சாரத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மக்களவைத் தொகுதியின் பாஜக சார்பில் அக்கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அவர் கோவை மட்டுமல்லாது தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று, கோவையில் பிரச்சாரம் செய்த அண்ணாமலை, டாஸ்மாக் குறித்தும் கள்ளுக்கடை குறித்தும் முக்கிய அறிவிப்பை தேர்தல் வாக்குறுதியாக குறிப்பிட்டார்.
அவர் கூறுகையில், டாஸ்மார்க் கடை மதுவினால் அனைவருக்கும் பிரச்சனைதான். அதனை தவிர்க்க கள் குடிக்கலாம். டாஸ்மார்க் நமக்கு வேண்டாம். ஒரு டாஸ்மாக்கை கடையை மூடுவது மட்டுமல்ல. எல்லா டாஸ்மாக் கடைகளையும் நாம் அகற்ற வேண்டும். கள்ளுக்கடை திறந்து டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்று கூறினார்.
மேலும், டெல்லிக்கு செல்லும் ஒரே வண்டி இதுதான் (பாஜக). மற்ற அனைத்தும் லோக்கல் வண்டி தான். பழங்குடியின மக்களின் பாதுகாவலராக பிரதமர் மோடி விளங்குகிறார் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது பிரச்சாரம் கூட்டத்தில் பேசினார்.