கோவை செல்வபுரம் பகுதியில் அதிமுக மற்றும் திமுகவினர் 200 பேர் மீது வழக்கு பதிவு
கோவை செல்வபுரம் பகுதியில் வாக்குபதிவின் போது ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அதிமுக மற்றும் திமுகவினர் 200 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி செல்வபுரம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியை பார்வையிட்டு திரும்பினார்.அப்பொழுது அதிமுக மற்றும் பாஜகவினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் சென்ற காரை சூழ்ந்துகொண்டு தாக்கினர்.
திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி தேர்தல் விதிமுறையை மீறி வாக்குச்சாவடியில் தேர்தல் பிரச்சாரம் செய்ததாக அதிமுகவினர் குற்றச்சாட்டினர்.இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.அப்பொழுது அங்கு வந்த துணை ராணுவ படையினர் சிவசேனாதிபதி சென்ற காரை பத்திரமாக மீட்டு அங்கிருந்து வெளியே அனுப்பிவைத்தனர்.அதன் பின்னர் சிவசேனாதிபதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று இதுகுறித்து புகார் அளித்தார்.
இந்நிலையில் செல்வபுரம் காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இதில் அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல் ,நோய் பரப்பும் வகையில் செயல்படுதல் ,சட்டவிரோதமாக கூடுதல் என்று பெயர் குறிப்பிடாமல் அதிமுக மற்றும் திமுகவினர் 200 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.