கோவை – 3 நாட்களில் 48 ரவுடிகள் சிறையில் அடைப்பு!
கோவையில் அடுத்தடுத்து அரங்கேறிய கொலைகளால் ரவுடி கும்பலை ஒடுக்க காவல்துறை அதிரடி நடவடிக்கை.
கோவையில் கடந்த 3 நாட்களில் 48 ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைத்தது காவல்துறை. கோவை மாவட்டத்தில் அடுத்தடுத்து அரங்கேறிய கொலைகளால் ரவுடி கும்பலை ஒடுக்க காவல்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ரவுடிகளின் பட்டியலை தயார் செய்த போலீஸ் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் சோதனை நடத்தி வழக்குப்பதிவு செய்து 48 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் ஆயுதங்களுடன் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அச்சுறுத்திய 15 பேரும் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனர். சோதனையின்போது கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள், கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தது காவல்துறை. கோவையில் கடந்த 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நீதிமன்ற வளாக அருகே கொலை என அடுத்தடுத்து 2 கொலை சம்பவம் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திருந்தது.
இதன் காரணமாக கோவை முழுவதும் சிறப்பு வாகன, விடுதிகள் மற்றும் வீடுகளில் தணிக்கை சோதனை நடத்தி சந்தேய சந்தேகத்துக்கிடமானோர் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சிக்கிய 48 பேரை கைது செய்து சிறையில் அடைந்துள்ளது காவல்துறை.