ஊடகங்களில் வெளியான பயங்கரவாதிகள் புகைப்படம் பற்றி காவல் ஆணையர் சிறப்பு பேட்டி!
கோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை கூறிய தகவலை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கோவையில் பல இடங்களில் பாதுகாப்பு முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதனால், கோவையில் ரயில் நிலையம், பஸ் நிலையம், வழிபாட்டு தளங்கள் என அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு, பொதுமக்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
தற்போது தமிழ்நாட்டில் ஊடுருவிய பயங்கரவாதிகள் என கூறி, தற்போது அந்த நபர்களின் போட்டோக்களை கோவை போலீசார் வெளியிட்டத்தாக கூறி, புகைப்படங்கள் வெளியாகின. இது குறித்து, கோவை காவல் ஆணையர் சுமித் சரண் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்தார்.
அவர் கூறுகையில், ‘ பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை. 2000 போலீசார் தீவிர சோதனை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் கூடும் பொது இடங்களில் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளான். இதுவரை நாங்கள் சந்தேகப்படும் எந்த பயங்கரவாதிகள் புகைப்படத்தையும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.’ என தனது பேட்டியின் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.