சென்னை குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல அம்ச திட்டப்பணிகளை காணொலிக் காட்சியில் தொடங்கிவைத்தார்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை நொளம்பூரில் 28 கோடியே 35 லட்சம் ரூபாயில் பதாளச் சாக்கடைத் திட்டம் 18 கோடி ரூபாயில் குடிநீர் திட்டம் ஆகியவற்றை காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். மேலும் சென்னை, தேனி, பெரியகுளம், கம்பம், உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 189 கோடியே 81 லட்சம் ரூபாயில் குடிநீர் திட்டம், பாதாளச் சாக்கடைத் திட்டம், சமுதாய நலக்கூடம் வகுப்பறைக் கட்டிடங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட திட்டப்பணிகளை தொடங்கி வைத்ததாகவும் அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பணிக்காலத்தில் காலமான 473 பேரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 16 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.