தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று 95ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி, கோபாலபுரத்தில் உள்ள அவரது வீடு விழாக்கோலம் பூண்டுள்ளது. அண்ணா அறிவாலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நள்ளிரவில் கட்சித் தொண்டர்கள் கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் கேக் வெட்டிக் கொண்டாடினர்.
கருணாநிதி பிறந்தநாளையொட்டி மருத்துவ முகாம்கள், ரத்ததான முகாம்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாழ்த்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம் போன்றவையும் நடைபெற உள்ளன. சென்னையில் இன்று மாலை நடைபெறும் கருத்தரங்கில் வைரமுத்து, பழ.கருப்பையா உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசுகின்றனர்.
இதனிடையே, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து, பதிவிட்டுள்ள அவர், நல்ல உடல் நலம் மற்றும் மகிழ்ச்சியுடன் கருணாநிதி வாழ பிரார்த்திப்பதாக கூறியுள்ளார்.
சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற…
சென்னை :நெல்லிக்காய் குல்கந்து தித்திக்கும் சுவையில் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; நெல்லிக்காய்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. சொல்லப்போனால், கடந்த மூன்று…
சென்னை: சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள் திடீரென எண்ணூரில் நிறுத்தப்பட்டது. இதனால், சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தின் ரயில்…
கோவை : காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி, மேட்டுப்பாளையம் சாலை, சர்க்யூட் ஹவுஸ், விமானப்படை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர்,…
நவி மும்பை : மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 டி0 போட்டிகள், 3…