ஒவ்வொரு முறையும் பிறருடன் கூட்டணி வைத்துக் கொள்வதால் நமக்கு எந்த பலனுமில்லை, நம்முடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் கட்சிகளுக்கு தான் பலன் கிடைக்கிறது என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
நேற்று காணொளி காட்சி மூலம் விழுப்புரம் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் மற்றும் தேமுதிக நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார் பிரேமலதா விஜயகாந்த். அப்பொழுது கொரோனா காலகட்டத்தில் தேமுதிக மக்களுக்கு செய்து வரக்கூடிய நலத்திட்டங்கள் குறித்து கேட்டறிந்த அவர், பின்பு வரக்கூடிய தேர்தலில் தேமுதிக கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் அதிக சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற வேண்டுமெனவும் அதற்கேற்ப பணிகளை தற்போது துவங்க வேண்டும் எனவும் ஆலோசனை கூறியுள்ளார்.
மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி வைத்து வைத்து கூட்டணி கட்சிகளுக்கு தான் பலன் கிடைக்கிறதே தவிர தேமுதிக கட்சிக்கோ, தேமுதிக தொண்டர்களுக்கோ எந்த பலனும் கிடைப்பதில்லை. எனவே தற்பொழுது வரக்கூடிய தேர்தலில் கூட்டணி இருக்கிறதோ இல்லையோ, எப்படி தேர்தல் அமைந்தாலும் நாம் தயாராக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
எனவே இனி வரக்கூடிய தேர்தலில் தேமுதிக வெற்றி பெற வேண்டும் நம் நிர்வாகிகள் வெற்றி பெற வேண்டும் என்ற விதத்தில் யோசனைகளை அமையுங்கள் என ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் தேமுதிக மாவட்ட செயலாளர்களுக்கு விஜயகாந்த் ஆலோசனை வழங்க உள்ளதாகவும், கொரோனா பரவல் குறைந்த பின் நேரில் ஆலோசிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.…
கோவை : கோவையில் வரும் 26, 27ம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா வான்ஸ் ஆகியோர் காலை 10 மணி…
சென்னை : விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் " ஒரு…
சென்னை : தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor) இருக்கும் ஆளுநருக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் மாநாடு போன்றவற்றை நடத்துவதற்கு…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில்,…