மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.
ஆனால் அதிமுக-பாமக –பாஜக -தேமுதிக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறியே நீடித்து வருகிறது.
கடலூர் ,கள்ளக்குறிச்சி,தருமபுரி, ஆரணி, சிதம்பரம்,கிருஷ்ணகிரி, அரக்கோணம் ஆகிய தொகுதிகளை அ.தி.மு.கவிடம் பாமக கேட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல் கடலூர்,கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, அரக்கோணம் ஆகியவற்றை தேமுதிகவும் கேட்பதாலேயே தொகுதி பங்கீடு முடியாமல் இழுபறி நீடிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
பாமகவிற்கு இணையாக தேமுதிக தொகுதிகள் கேட்பதால் கூட்டணியில் சிக்கல் நீடிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கூட்டணி தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், தேமுதிக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். ஒருமித்த கருத்துடன் தேர்தலை சந்திப்போம். அதிமுக கூட்டணி மகத்தான வெற்றிபெறும்.
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் இன்னும் ரகசியமாக அதிமுகவிடம் பேச்சுவார்த்தையில் உள்ளது. திமுக-காங்கிரஸை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே அதிமுக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை : சண்டிகர் மாநிலத்தில் இளம் ஐபிஎஸ் அதிகாரிகள் கலந்து கொண்ட 5வது ஐபிஎஸ் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில்…
சென்னை : ஃபெஞ்சல் புயலின் தாக்கம் தற்போது தான் வடதமிழக மாவட்டங்களில் சற்று மெல்ல மெல்ல குறைய தொடங்கியுள்ளது. இன்னும்…
ஐதராபாத்: தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களான நாக சைதன்யா - நடிகை சோபிதாவின் திருமணம் இன்று பிரமாண்டமாக நடந்து முடிந்தது.…
புதுச்சேரி: ஃபெஞ்சல் புயலால் பெருமழை பாதிப்பில் சிக்கிய புதுச்சேரியில் அதிகம் பாதிக்கப்பட்ட கிருஷ்ணா நகர், வெங்கட்டா நகர் உள்ளிட்ட இடங்களில்…
கடலூர்: பெஞ்சல் புயல் கனமழை காரணமாக வட தமிழக மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் இன்னும் வெள்ள…
சென்னை: வடசென்னை உயர்கல்வித்துறை சார்பில் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில், ரூ.1,383 கோடி மதிப்பீட்டில் 79 புதிய திட்டப் பணிகளை…