மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.
ஆனால் அதிமுக-பாமக –பாஜக -தேமுதிக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறியே நீடித்து வருகிறது.
இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மார்ச் 1 மற்றும் 2-ஆம் தேதிகளில் ஆலோசனை நடத்தினார்.
இதில் மக்களவை தேர்தலில் கூட்டணி எவ்வாறு அமைந்தாலும் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தேனி தொகுதியில் போட்டியிட வேண்டும் என தேமுதிக செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேமுதிக முக்கிய ஆலோசனை கூட்டம் இன்று (மார்ச் 5-ம் தேதி) நடத்த உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். மேலும் 5-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…