நிலக்கரி விவகாரம்: யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது…தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கண்டனம்.!

Default Image

தமிழத்தில் வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட தஞ்சை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இதுகுறித்து தமிழகஅரசு தரப்பில், விளக்கமளிக்கப்பட்டிருந்த நிலையில், மத்திய அரசின் இந்த முடிவுக்கு விவசாயிகள் தரப்பிலும், அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Vijayakanth

அந்த வகையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிக்கையின் மூலம் தன்னுடைய கண்டனங்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விஜயகாந்த் அறிக்கையில் கூறியதாவது ” நிலக்கரி சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் முடிவை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஏற்கனவே வறட்சி, மழை நீரில் மூழ்கி விளைநிலங்கள் சேதம் போன்ற இயற்கை சீற்றங்களால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இதுபோன்ற சூழலில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதால் ஓட்டு மொத்த டெல்டா பகுதிகளும் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது.  விவசாயமும் கேள்விக்குறியாகிவிடும். விவசாயிகள் மீது உண்மையில் பற்று இருப்பதாக சொல்லி கொள்ளும் மத்திய அரசு, தற்போது விவசாயிகளுக்கு எதிரான திட்டத்தை அறிவித்திருப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். இல்லையென்றால் விவசாய மக்களை ஒன்றுதிரட்டி வீதியில் இறங்கி போராடவும் தேமுதிக தயங்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

மேலும், இன்று சட்டப்பேரவையில் நிலக்கரி திட்டம் தொடர்பாக விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த பேரவையில் இதற்கு விளக்கம் அளிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்