TNPSC, SSC, IBPS, RRB உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் – தமிழ்நாடு அரசு

tn government

தமிழகத்தில் அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பணியாற்ற விரும்பும் பட்டதாரி இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் TNPSC, SSC, IBPS, RRB உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பில், தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரியில் 500 இடங்களுக்கும், சென்னை சேப்பாக்கம் மாநிலக் கல்லூரி வளாகத்தில் 300 இடங்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த போட்டி தேர்வுகளில் கலந்துகொள்ளும் தேர்வர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணையவழியாக விண்ணப்பங்கள் பெற்று சேர்க்கை நடைபெற உள்ளது.

பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை ஆறு மாத காலம் வாராந்திர வேலை நாட்களில் நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் தேர்வர்கள் குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு 01.01.2024 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேலும், போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் உணவும் தங்கும் வசதிகளும் இல்லை.

எங்கள் எய்ம்ஸ் எங்கே? செங்கல் நட்டு 5 ஆண்டுகள் நிறைவு – சு.வெங்கடேசன் எம்பி

எனவே, பயிற்சியில் சேர விரும்பும் தேர்வர்கள் www.cecc.in வாயிலாக வரும் 29ம் தேதி முதல் பிப்.12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் அல்லது 044-25954905 மற்றும் 044-28510537 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழக அரசால் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள இனவாரியான இடங்களுக்கு ஏற்ப தேர்வர்கள் தெரிவு செய்யப்பட்டு, தேர்வர்களின் விவரங்கள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் மார்ச் மாத முதல் வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்