கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு -அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!
கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு புகார் குறித்து 2 வாரங்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
கடந்த 2018-ல் முறையாக கூட்டுறவு சங்கத் தேர்தல் நடக்கவில்லை என்று திருப்பூரை சேர்ந்த விஸ்வலிங்கம்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில், மாணிக்கபுரம் புதூர் வேளாண் கூட்டுறவு சங்க இயக்குனர் பதவிக்கு போட்டியிட விண்ணப்பித்தேன். முன் கூட்டியே இயக்குனர் தேர்வு செய்யப்பட்டதாக கூறி தேர்தல் நடைபெறவில்லை.
கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடந்ததாக விஸ்வலிங்கம்சாமி குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் 95% கூட்டுறவு சங்கங்களுக்கு முறையாக தேர்தல் நடத்தாமல் அதிமுகவினரே நியமனம் செய்யப்பட்டனர். அதிமுக ஆட்சிகாலத்தில் கூட்டுறவு சங்கங்களில் ரூ.9000 கோடி அளவுக்கு கடன் மோசடி நடந்துள்ளதாகவும், கடந்த ஆட்சியில் ஆளும் கட்சி நிர்வாகிகள் தலைவராக இருந்ததால் தங்கள் பினாமிகளுக்கு கடன் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, அதிமுக ஆட்சியின் போது நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு புகார் குறித்து 2 வாரங்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.