ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் ! இடைக்கால தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு
கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.
சமீபத்தில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கூட்டுறவு வங்கி மூலம் நகைக்கடன், விவசாய கடன் வழங்கப்பட்டு வந்தது.
இதையடுத்து தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்க இணை பதிவாளர் அனைத்து மாவட்ட மற்றும் மண்டல இணை பதிவாளர்களுக்கு செல்போன் மூலம் குறுஞ்செய்தி ஒன்றினை அனுப்பி அதில், தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் நகைக்கடன் வழங்குவதை மறு உத்தரவு வரும் வரை வழங்கக் கூடாது என கூறியதாக தகவல் வெளியானது.
எனவே கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் உள்பட எந்த கடனும் நிறுத்தி வைக்கப்படவில்லை என முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக கூட்டுறவு சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்டது. வழக்கினை விசாரித்த நீதிமன்றம்,மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து விட்டது. மேலும் மத்தய அரசு ,ரிசர்வ் வங்கி 4 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது நீதிமன்றம்.