கூட்டுறவு உதவி இயக்குனர் பணிக்கு தேர்வு தேதி அறிவிப்பு..! – டிஎன்பிஎஸ்சி

கூட்டுறவு உதவி இயக்குனர் பணிக்கு எழுத்துத் தேர்வு ஏப்ரல் 30-ல் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
கூட்டுறவு தணிக்கைத் துறையில் உதவி இயக்குநர் பணிக்கு எழுத்து தேர்வுக்கான தேதியை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதன்படி, எழுத்துத் தேர்வு ஏப்ரல் 30-ல் நடைபெறும் என்றும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. ஹால்டிக்கெட் www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.