வாகனங்களில் CNG/LPG மாற்றங்கள் செய்யக்கூடாது.. உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை.!

CNG - LPG

சென்னை: அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களால் வாகனங்களில் CNG/LPG மாற்றங்கள் செய்யகூடாது என போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சமீப காலமாக, சில மோட்டார் வாகனங்கள் தானாக தீ விபத்துக்குள்ளாகி வருவது வழக்கமாகி வருகிறது. இந்நிலையில், மோட்டார் வாகனங்களில் அங்கீகரிக்கப்படாத CNG, LPG மாற்றங்கள் செய்யகூடாது.

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் உரிய அனுமதியின்றி வாகனங்களில் மாற்றம் செய்வது குற்றம் என அரசு கூறியுள்ளது. வாகன உரிமையாளர் இவ்வகை செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து போக்குவரத்து ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. தீ விபத்து பற்றி காரணங்களை ஆராய்ந்ததில், மூன்றாம் தரப்பு மற்றும் பொருத்தமில்லாத நிறுவனங்களால் பொருத்தப்பட்ட CNG, LPG கருவிகளின் அங்கீகாரமற்ற பொருத்தம் செயப்பட்டது முக்கிய ஆதாரங்களில் ஒன்றாகும்.

இந்நிலையில், தீ விபத்துகளைத் தடுக்கும் வகையில், அனைத்து வாகன உரிமையாளர்களும், அங்கீகரிக்கப்படாத இத்தகைய மாற்றங்களில் ஈடுபட வேண்டாம் என்று போக்குவரத்து ஆணையர், போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் அறிவுறுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்