இன்று மீண்டும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை.! என்ன முடிவு வெளியாகும் ?
மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மீண்டும் ஆலோசனை நடத்தவுள்ளார்.
வருகின்ற 31-ம் தேதியுடன் 4-வது கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ள இன்று மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார். பிரதமர் மோடி 4-ம் கட்ட ஊரடங்கு பிறப்பித்தபோது இந்த ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என அறிவித்தார்.
இதைதொடர்ந்து, 4-ம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும் முன்பை விட தளர்வுகள் அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், பொறுத்தவரை சலூன் கடைகள் திறப்பு , ஆட்டோக்கள் இயங்க அனுமதி, நேற்று முதல் கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள் இயங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மருத்துவ நிபுணர் குழுவுடன் இன்று காலை 11 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மருத்துவ நிபுணர்கள் கொடுக்கும் தகவல் படியே தமிழகத்தில், 5-ம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா..? அல்லது மீண்டும் தளர்வுகள் கொடுக்கப்படுமா..? என்பது தெரியும் .