முதல்வரின் நிவாரண நிதிக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ரூ.10.42 லட்சம் நிதியுதவி!
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ரூ. 10.42 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ள நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு தழுவிய ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுறது. மேலும், ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கவும், நோய் மேற்கொண்டு பரவுவதை தடுக்கவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
இந்த முடக்கத்தால் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க, விருப்பம் உள்ளவர்கள் கொரோனா தடுப்பு பணிக்காக நிதி வழங்கலாம் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.எனவே தனிநபர்கள், அரசியல் கட்சிகள், பிரபலங்கள், தொழில் நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் என பலரும் நன்கொடைகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் முதல்வரின் நிவாரண நிதிக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ரூ. 10.42 லட்சம் நிதியுதவி வழங்குவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
CMRL have Contributed for Chief Minister Public Relief Fund to fight against the spread of COVID-19 Virus. pic.twitter.com/leBMEgOtPo
— Chennai Metro Rail (@cmrlofficial) April 12, 2020