முதலமைச்சர் பழனிசாமியை கொடைக்கானலில் வைத்து கொலை செய்யப் போகிறேன்! செல்போனில் மிரட்டல் விடுத்த நபர்
முதலமைச்சர் பழனிசாமியை கொடைக்கானலில் வைத்து கொலை செய்யப் போவதாக செல்போனில் மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடம் இருந்து செல்போனில் அழைப்பு வந்தது.அந்த அழைப்பில் முதலமைச்சர் பழனிசாமியை கொடைக்கானலில் வைத்து கொலை செய்யப் போவதாக கூறிவிட்டுஅழைப்பைதுண்டித்துவிட்டான்.
பின் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்கள்.இதில் மிரட்டல் விடுத்த நபர், திண்டுக்கல்லைச் சேர்ந்த சந்துரு என்பது தெரியவந்தது.பின் போலீசார் சந்துருவைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.