டெல்லி உயர்நீதிமன்றம், இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில், தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையம் 3 நாட்களில் பதிலளிக்குமாறு, உத்தரவிட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு ஒதுக்கிய தலைமைத் தேர்தல் ஆணையம், அவர்களது அணியே அதிமுக என்றும் அங்கீகாரம் வழங்கியது.
இதை எதிர்த்து, டி.டி.வி.தினகரன் தொடர்ந்த வழக்கு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்குடன், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தனக்கு ஒதுக்கிய குக்கர் சின்னத்தையே உள்ளாட்சித் தேர்தலிலும் தமது அணியினருக்கு ஒதுக்க வேண்டும் என டி.டி.வி.தினகரன் கூடுதல் மனுவை தாக்கல் செய்தார்.
அந்த மனுவுக்கு நேற்று பதிலளித்த தலைமைத் தேர்தல் ஆணையம், தினகரன் அணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி கிடையாது என்றும், மாநிலத் தேர்தல் ஆணையம் நடத்தும் உள்ளாட்சித் தேர்தலில் தாங்கள் தலையிட முடியாது என்றும் கூறியது.
இந்த வழக்கை மீண்டும் இன்று விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், உள்ளாட்சித் தேர்தலில் குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரிய வழக்கு விசாரணையை பிப்ரவரி 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
மேலும், இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைத் தேர்தல் ஆணையம் தரப்பினர் 3 நாட்களுக்குள் பதிலளிக்கவும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை: பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். இது தற்போது அரசியல்…
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனுக்கு அணியில் விளையாட வாய்ப்புகள் சரியாக வழங்கப்படாதது ஒரு பெரிய கேள்விக்குறியான…
சென்னை : 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இன்று 5-ஆம்…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. பெரியார் குறித்து…
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில், வரும் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…