சற்று நேரத்தில் சைதாப்பேட்டை மெகா தடுப்பூசி முகாம் செல்லும் முதல்வர்..?
சைதாப்பேட்டையில் நடைப்பெறும் மெகா தடுப்பூசி முகாமில் சற்று நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இரண்டாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் 20,000 மையங்களில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தடுப்பு ஊசி செலுத்தி கொள்பவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பரிசுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் மட்டும் 1,600 மையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்நிலையில், சைதாப்பேட்டையில் நடைப்பெறும் மெகா தடுப்பூசி முகாமில் சற்று நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அன்று ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 28 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.