வருகின்ற திங்கள்கிழமை திரையுலகினருடன் முதல்வர் சந்திப்பு!
வருகின்ற திங்கள்கிழமை திரையுலகினருடன் முதல்வர் சந்திப்பு நடைபெறவுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தமிழகத்திலும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இருப்பினும் அரசு கடந்த சில மாதங்களாக போடப்பட்ட ஊரடங்கு உத்தரவால் மக்கள் அவதிப்பட்டு வருவதால் சில தளர்வுகளை மக்களுக்கு அறிவித்து வருகிறது.
இந்நிலையில் வருகின்ற திங்கட்கிழமை அன்று தமிழ் திரையுலகினர் உடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு திரையரங்குகளை திறப்பது குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.