திருவாரூரில் சூரிய மின் உற்பத்தி பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைப்பார் – அமைச்சர் செந்தில் பாலாஜி
சூரிய மின் உற்பத்தில் தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று முன்தினம் அதிகபட்ச உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்.
தமிழகத்தில் முதல் சூரிய மின் சக்தி பூங்கா திருவாரூர் மாவட்டத்தில் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் அளித்துள்ளார்.
திருவாரூரில் சூரிய மின் உற்பத்தி பூங்கா
அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் 6,000 மெகாவாட் சூரிய மின்சாரத்தை மின்சார வாரியமே சொந்தமாக உற்பத்தி செய்வதற்கு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன; திருவாரூரில் சூரிய மின் உற்பத்தி பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைப்பார்.
சூரிய மின் உற்பத்தில் தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று முன்தினம் அதிகபட்ச உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.