செந்தில் பாலாஜிக்கு நன்றி தெரிவித்த முதல்வர் மு.க ஸ்டாலின்

CM Stalin: தன்னுடைய பணிகள் மூலம் நம் உள்ளங்களை பெற்றுள்ளார் செந்தில் பாலாஜி என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஈரோடுக்கு வந்த நிலையில் இன்று ஈரோடு திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசும் போது, “செந்தில் பாலாஜி இங்கு இல்லை என்றாலும் தன்னுடைய பணிகள் மூலம் நம் உள்ளங்களை பெற்றுள்ளார், அவருக்கு நன்றிகள்.

நல்ல விமர்சனம் வைத்தால் அதை மாற்றலாம். ஆனால் வேண்டுமென்றே அவதூறுகளை சொல்கின்றனர். திமுக கொண்டு வந்ததால் நல்ல திட்டங்களை கூட அதிமுக மற்றும் பாஜக குறை சொல்கிறது. ஈரோடு மண்ணுக்கு ஏராளமான பெருமைகள் உண்டு.

இது பரப்புரை கூட்டமா அல்லது மாநில மாநாடா என்ற கேள்வி எழும் அளவுக்கு திரண்டு வந்திருக்கிறீர்கள். நாடு காக்கும் ஜனநாயக போர்க்களத்திற்கு அழைப்பு விடுக்க வந்துள்ளேன். தமிழ்நாட்டில் உள்ள எல்லோருக்கும் ஏதோ ஒரு திட்டத்தில் பயன் கிடைக்கும் வகையில் ஆட்சியை நடத்தி வருகிறோம். மக்கள் பயன்பெறும் நல்லாட்சியை வழங்கி வருகிறோம். அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

மகளிர் உரிமை தொகை திட்டத்தால் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். மகளிருக்காக ஏராளமான திட்டங்கள் செயலபடுத்தப்பட்டு வருகிறது. மக்களுக்கான அரசாக திமுக ஆட்சி நடந்து வருகிறது. குழந்தைகளுக்கு சாப்பாடு போட்டு, பெண்களுக்கு பணமும் கொடுக்கிறீர்கள் என தாய்மார்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாடு முன்னேற்றப்பாதையில் செல்ல ஒவ்வொரு திட்டத்தையும் வடிவமைத்து செயல்படுத்துகிறோம். இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் அரசை குறைகூறுகின்றனர். அரசை குறை கூறுவதாக நினைத்து, திட்டங்களால் பயன்பெரும் மக்களை கொச்சைப்படுத்துகிறார்கள்.

தேர்தல் அறிக்கையில் சொல்வதை செய்யும் கட்சி தி.மு.க. சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து இருண்ட கால ஆட்சியை கொடுத்தது அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமியால் பாஜகவை ஒருபோதும் எதிர்க்க முடியாது.. அதற்கு துணிவு வேண்டும். முதுகெலும்பு வேண்டும்” என்றார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்