முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, தயவு செய்து ஆன்லைன் ரம்மியை தடை செய்யுங்கள். என்னை போல் பல பேர் குடும்பத்தை அனாதையாக விட்டுச்செல்கிறார்கள். இனி யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது. – ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்துகொண்ட சுரேஷ் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்தில் சிக்கி அதிகளவில் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த தற்கொலை சம்பவமானது சென்னையில் நடந்துள்ளது.
காணாமல் போன சுரேஷ் : சென்னை கேகே நகரில் அச்சு பதிப்பகம் நடத்தி வந்த சதீஸ் எனும் 45வயது மதிக்கத்தக்க நபர் கடந்த வெள்ளிக்கிழமை தனது வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவரை பல்வேறு இடங்களில் தேடிய அவரது மனைவி அவர் எழுதிய தற்கொலை கடிதம் கிடைத்தவுடன் கேகே நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்து இருந்தார்.
கரை ஒதுங்கிய உடல் : இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னை மெரினாவில் ஒருவரது உடல் கரை ஒதுங்கியதாக காவல்துறைக்கு தகவல் வந்த நிலையில், அது காணாமல் போன சுரேஷ் தானா என அவர் மனைவி மூலம் உறுதிசெய்யப்பட்டது. அவரும் இறந்து போனது தனது கணவர் தான் என்றும்,
16 லட்சம் இழப்பு : தனது கணவர் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி சுமார் 16 லட்சத்தை இழந்துள்ளார் எனவும், அதனால் மனமுடைந்தது தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், சுரேஷ் எழுதிய தற்கொலை கடிதத்தில், அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள். நான் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்துவிட்டேன். எனவும்,
முதல்வருக்கு வேண்டுகோள் : அந்த ஆன்லைன் ரம்மியில் இருந்து தன்னால் மீள முடியவில்லை. எனவும், உங்கள் அனைவரிடம் இருந்தும் பிரியா விடைபெறுகிறேன். மதிப்பு மிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, தயவு செய்து ஆன்லைன் ரம்மியை தடை செய்யுங்கள். என்னை போல் பல பேர் குடும்பத்தை அனாதையாக விட்டுச்செல்கிறார்கள். இனி யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது. தயவு செய்து ஆன்லைன் ரம்மியை தடை செய்யுங்கள். என உருக்கமாக கேட்டுகொண்டுள்ளார் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரைவிட்ட சுரேஷ்.
தற்கொலை என்பது எதற்க்கும் தீர்வு கிடையாது. அப்படி தற்கொலை எண்ணம் தோன்றினால் , 104 எனும் இலவச எண்ணிற்கு அழைத்து ஆலோசனை பெறலாம்.
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல கதை கருத்தியல் உள்ள திரைப்படங்களை விறுவிறுப்பாகவும் உயிரோட்டமாகவும் திரை ரசிகர்கள் கொண்டாடும் விதமாக…
சென்னை: பொங்கல் பரிசாக பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 அதிகரித்து சவரனுக்கு…
சென்னை : தந்தை பெரியார் பற்றி நம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்துக்கள் அரசியல் களத்தில் கடும்…
டெல்லி : அரசு வேலை வாங்கி தருவதாக 100க்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் பண மோசடி, அதிமுவின் இரட்டை இலை சின்னத்தை…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின் அணி…
சென்னை: 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' அதுவே 'போக்கி' பண்டிகை என்றாகி தற்போது போகி என மருவியுள்ளது. சென்னையில் பல்வேறு…