பாஜகவின் அத்தனை பாவங்களுக்கும் அதிமுக உடந்தை… முதலமைச்சர் ஸ்டாலின்!

mk stalin

நாடாளுமன்ற தேர்தல் பணி குறித்து ‘இன்றைய உரிமை முழுக்கமே நாளைய வெற்றி முழுக்கம்’ என்று திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், இந்தியாவை காக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் திமுகவுக்கு உள்ளது. திமுகவின் கொள்கை முழக்கம் பாசிச சக்திகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. திமுக ஒரு மாநில கட்சி என்பதை போகுமிடமெல்லாம் பாஜகவினர் விமர்சனம் செய்கிறார்கள்.

அதாவது, திமுக என்பது மாநிலக் கட்சிதானே என்று எள்ளி நகையாட நினைத்தவர்கள், ஒவ்வொரு மாநிலத்திற்குச் செல்லும்போதும் திமுகவை விமர்சித்துப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். மதவெறி அரசியல் நடத்தும் பாஜகவைச் கருத்தியல் ரீதியாகவும் செயல்பாட்டு ரீதியாகவும் எதிர்கொள்ளக்கூடிய வலிமை மாநிலக் கட்சியான திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கும் இருக்கிறது.

முதல்வர் உடனான சந்திப்பு… போராட்டத்தை வாபஸ் பெற்ற ஜாக்டோ ஜியோ அமைப்பு.!

திமுக எனும் பேரியக்கத்தால் பாஜக கட்சியின் நிர்வாகிகளுக்கு ஒவ்வொரு இரவுமே தூக்கம் தொலைத்த இரவுகள்தான். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டாவை தூங்கவிடாமல் செய்கிறது திமுக. மத்திய பாஐக ஆட்சியாளர்கள் கடந்த 10 ஆண்டுகளில் ஜனநாயகத்தின் வேர்களில் வெந்நீர் ஊற்றி, மக்களாட்சியின் மாண்பை முற்றிலுமாகச் சிதைத்துள்ளனர்.

பாஜக – அதிமுக மறைமுக கூட்டாளிகளின் நேரடி துரோகங்களை அமல்படுத்தி விழுப்புணர்வு ஏற்படுத்துவோம். தற்போது பாஜக சொல்லி கொடுத்தது போலவே கூட்டணி இல்லை என்று அதிமுக பசப்பி கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கும் இந்திய அளவிலும் பாஜக செய்த அத்தனை பாவங்களுக்கும் உடந்தையாக இருந்ததுதான் அதிமுக. எனவே உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் அமைந்திட வேண்டும்.

தேர்தல் பணிகளை விரைந்து தொடங்கிய இயக்கமாக திமுக முன்னணியில் இருக்கிறது. ஆதலால் இன்றைய உரிமை முழுக்கமே நாளைய வெற்றி முழுக்கமாக அமைந்திடும். நாடாளுமன்ற பொதுக்கூட்டங்கள் சிறப்பாக அமையட்டும். உரிமையின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும், வெற்றி முழக்கம் திசையெட்டும் தெறிக்கட்டும் என தெரிவித்துள்ள முதலமைச்சர், தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்த வரும் விசாயிகள் மீதான அடக்குமுறைக்கு கண்டனம் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்