தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு,நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் கோயம்புத்தூர் நகரில் ரூ.230 கோடி செலவில் இராமநாதபுரம் மற்றும் சுங்கம் முக்கிய சந்திப்புகளில் 3.15 கி.மீ. நீளத்திற்கு கட்டப்பட்டுள்ள 4 வழித்தட மேம்பாலம் மற்றும் அதே தேசிய நெடுஞ்சாலையில் ரூ.60 கோடி செலவில் கவுண்டம்பாளையம் சந்திப்பில் 1.17 கி.மீ. நீளத்திற்கு கட்டப்பட்டுள்ள மேம்பாலம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
இதன்மூலம்,போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, சிக்னல் மற்றும் சந்திப்புகளில் வாகனங்கள் நின்று செல்வதால் ஏற்படும் காலதாமதமும் தவிர்க்கப்படும் என்றும்,அத்துடன் விபத்துக்களை தவிர்ப்பதற்கும் இது உதவும் எனவும்,இதன்மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்பெறுவர் எனவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில்,பொதுப்பணி நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெர்த் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில்…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 22] எபிசோடில் விஜயா செய்த காரியத்தை அண்ணாமலையிடம் கூறும் முத்து.. அண்ணாமலை எடுத்த…
சென்னை : சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை செல்லும் 28 மின்சார ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று(22.11.2024)…
திருநெல்வேலி : மாவட்டத்தில் இன்று அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இந்த ஆய்வு…
சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…