#Justnow:ரூ.230 கோடி செலவில்;3.15 கிமீ நீளத்தில் கட்டப்பட்ட மேம்பாலம் – திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

Default Image

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு,நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் கோயம்புத்தூர் நகரில்  ரூ.230 கோடி செலவில் இராமநாதபுரம் மற்றும் சுங்கம் முக்கிய சந்திப்புகளில் 3.15 கி.மீ. நீளத்திற்கு கட்டப்பட்டுள்ள 4 வழித்தட மேம்பாலம் மற்றும் அதே தேசிய நெடுஞ்சாலையில் ரூ.60 கோடி செலவில் கவுண்டம்பாளையம் சந்திப்பில் 1.17 கி.மீ. நீளத்திற்கு கட்டப்பட்டுள்ள மேம்பாலம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

இதன்மூலம்,போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, சிக்னல் மற்றும் சந்திப்புகளில் வாகனங்கள் நின்று செல்வதால் ஏற்படும் காலதாமதமும் தவிர்க்கப்படும் என்றும்,அத்துடன் விபத்துக்களை தவிர்ப்பதற்கும் இது உதவும் எனவும்,இதன்மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்பெறுவர் எனவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில்,பொதுப்பணி நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்