சென்னை:மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 12 மினி பேருந்துகளின் இயக்கத்தினை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் உள்ள 210 மினி பேருந்துகளில் 66 மினி பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருவதாகவும், சென்னையில் குறைந்த அளவில் மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதால், கூடுதலாக மினி பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்நிலையில்,பொதுமக்களின் பயன்பாட்டிற்காக,சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் 12 மினி இணைப்பு பேருந்துகளின் இயக்கத்தினை தலைமைச் செயலகத்தில்,காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
ஆகிய வழித்தடங்களில் 12 மினி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இந்த நிகழ்ச்சியில்,குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் / முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ்,போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர்.கே.கோபால்,மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் .அ.அன்பு ஆபிரகாம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…