மெட்ரோ ரயில் நிலையங்கலுக்கு மினி பேருந்து சேவை-தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!

Default Image

சென்னை:மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 12 மினி பேருந்துகளின் இயக்கத்தினை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் உள்ள 210 மினி பேருந்துகளில் 66 மினி பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருவதாகவும், சென்னையில் குறைந்த அளவில் மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதால், கூடுதலாக மினி  பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில்,பொதுமக்களின் பயன்பாட்டிற்காக,சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் 12 மினி இணைப்பு பேருந்துகளின் இயக்கத்தினை தலைமைச் செயலகத்தில்,காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

  • ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் – மடிப்பாக்கம் பேருந்து நிலையம்
  • ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் – போரூர்
  • ஏர்போர்ட் மெட்ரோ ரயில் நிலையம் – குன்றத்தூர்
  • திருவொற்றியூர் பேருந்து நிலையம் – மணலி
  • கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் – மதுரவாயல் ஏரிக்கரை
  • கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் – நொளம்பூர் சக்தி நகர்.

ஆகிய வழித்தடங்களில் 12 மினி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இந்த நிகழ்ச்சியில்,குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் / முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ்,போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர்.கே.கோபால்,மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் .அ.அன்பு ஆபிரகாம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்