சிபிஐ மாநில மாநாடு.! திருவனந்தபுரம் சென்றார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.!
கேரளாவில் நடைபெற உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவனந்தபுரம் சென்றுள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று தொடங்கி 4 நாட்கள் நடைபெறுகிறது. இன்றைய நிகழ்வுகளை (அக்டோபர் 1) காலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா தொடங்கி வைத்தார்.
மாலையில், நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் அதுல்குமார் அஞ்சான் ஆகியோர் சிறப்பு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேச உள்ளனர்.
இதில் கலந்து கொள்வதற்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்வர் ஸ்டாலின் திருவனந்தபுரம் சென்றடைந்தார். அங்கு அவருக்கு திமுக கட்சியினர், அரசியல் பிரமுகர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.
இன்று மாலை மாநாடு முடிந்ததும், இரவு 7 மணிக்கு மேல் விமானம் மூலம் புறப்பட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை வந்தடைவார் என தகவல் வெளியாகியுள்ளது.