அமைச்சர் செந்தில் பாலாஜியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்திக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
அமலாக்கத்துறையினர் சோதனைக்கு பிறகு இன்று அதிகாலை தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்படுகையில் நெஞ்சுவலி காரணமாக, தற்போது ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து அறிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓமந்தூரார் மருத்துவமனை செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை தலைமைச் செயலகம் செல்லும் முன்பு சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஓமந்தூரார் மருத்துவமனையின் 6-வது மாடியிலுள்ள ICU-வில் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று காலை 9.30 மணியளவில் முதல்வர் நேரில் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவரது இதயத்துடிப்பு , உடலில் ஆக்சிஜன் சமநிலை கண்காணிக்கப்பட்டு வருவதாக ஓமந்தூரார் மருத்துவமனை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது,
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம்…
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…