Breaking:”அகழாய்வு பணிகள்…110 விதியின் கீழ்” – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
கீழடி அகழாய்வு உலக அளவில் கவனத்தை பெற்றுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப் பேரவையில் அகழாய்வுப் பணிகள் தொடர்பாக 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அவர்கள், தற்போது பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார்.இந்நிலையில்,கீழடி அகழாய்வு உலக அளவில் கவனத்தை பெற்றுள்ளது என்று சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக முதல்வர் கூறியதாவது:
“கீழடி அகழாய்வை மத்திய அரசு பாதியில் கைவிட்டது.ஆனால்,தற்போது கீழடி உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ளது.கீழடி மூலம் சங்ககால தமிழர்களின் வாழ்க்கை முறையை உலகமே அறிந்துள்ளது.2018 ஆம் ஆண்டு கீழடிக்கு நான் நேரில் சென்று பார்வையிட்டபோது,அங்கு நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த வெள்ளிக்காசு கண்டறியப்பட்டது.எனவே,கீழடி நாகரிகம் கிமு ஆறாம் நூற்றாண்டு நாகரிகம் என்பது தெரியவந்துள்ளது”,என்று தெரிவித்துள்ளார்.