சாதனையை படைத்த இஸ்ரோவுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து!
கடந்த ஜூலை 14ல் விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் சரியாக 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியது. தற்போது, இந்தியாவே இந்த வரலாற்று சாதனை வெற்றியை கொண்டாடி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இஸ்ரோ குழுவுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
முதல்வர் மு.க ஸ்டாலின் தனது X தள பக்கத்தில், சந்திராயன்-3 வெற்றிகரமாக தரையிறங்கியது. நிலவில் கால் பாதித்த நான்காவது நாடாக இந்தியா ஒரு மகத்தான சாதனை படைத்திருக்கிறது. அயராத முயற்சிகள் மற்றும் புதுமைக்காக ஒட்டுமொத்த குழுவிற்கும் பாராட்டுக்கள். இந்தியாவின் விண்வெளி ஆய்வுக்கு ஒரு மாபெரும் வெற்றி என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
Congratulations to @isro on the successful landing of #Chandrayaan-3! A monumental achievement that places India as the fourth country to conquer the lunar surface.
Kudos to the entire team for their tireless efforts and innovation. A giant leap for… pic.twitter.com/1H3PkIPgsC— M.K.Stalin (@mkstalin) August 23, 2023