தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார் முதல்வர் ஸ்டாலின்..!

M.K.Stalin: மக்களவை தேர்தலுக்கான பரப்புரையில் ஈடுபட்டு வரும் முதல்வர் மு.க ஸ்டாலின்.
திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்காக தனது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து இன்று திருநெல்வேலியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தலை சந்திக்கும் வகையில் திமுக கட்சி காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்தநிலையில், தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியான திமுக தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது. அந்த வகையில், திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களாக சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அதன்படி திருநெல்வேலியில் உள்ள நாங்குநேரியில் இன்று திருநெல்வேலி, கன்னியாகுமரி வேட்பாளர்களை அறிமுகம் செய்கிறார். இதற்காக பிரமாண்டமாக மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சற்றுமுன்னர் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு முதல்வர் வந்தடைந்தார், அங்கிருந்து நெல்லை செல்லும் அவர் பிரச்சாரம் முடித்து மீண்டும் தூத்துக்குடிக்கு திரும்பி அங்குள்ள விடுதியில் இன்றிரவு தங்கவுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெலுங்கானா சுரங்கப்பாதை விபத்து… உள்ளே சிக்கிய 8 பேரின் நிலமை என்ன? மீட்கும் பணி தீவிரம்!
February 23, 2025
இந்தியா – பாகிஸ்தான் போட்டி: சென்னை கடற்கரையில் சிறப்பு ஏற்பாடு.!
February 23, 2025
AUSvENG : ருத்ர தாண்டவம் ஆடிய ஆஸ்திரேலியா! போராடி தோற்ற இங்கிலாந்து!
February 22, 2025
மீண்டும் மீண்டுமா? அஜித்-ன் GBU புது அப்டேட்..! குழப்பத்தில் ரசிகர்கள்!
February 22, 2025