வெளிநாட்டிலிருந்து வந்தவர்களை வெளியே வராதவாறு தீவிரமாக கண்காணிக்க முதல்வர் உத்தரவு.!
வெளிநாட்டிலிருந்து வந்த சுமார் 54,000 பேர்களின் பட்டியல் மாவட்ட ஆட்சியர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களை அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தவும், அவர்கள் வெளியே வராதவாறு தீவிரமாக கண்காணிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
காணொளி கட்சி மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்திய முதலமைச்சர் பழனிச்சாமி, அப்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறித்து அஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையில், வெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்துள்ள தனிமைப்படுத்தவும், அவர்களை தீவிரமாக கண்காணிக்கவும் தெரிவித்துள்ளார். இதனிடையே தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மதுரையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.