மாவட்ட ஆட்சியாளர்கள் அலட்..உஷார் நீர் நிலைகளை தீவிரமாக கண்காணியுங்கள்…உத்திரவிட்டார் முதல்வர் பழனிச்சாமி…!!!
மாவட்ட ஆட்சியாளர்கள் நீர் நிலைகளை தீவிரமாக கண்காணிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மேற்கு தொடர்ச்சி மலையினை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்றும் 70 சதவீதத்திற்கு கூடுதலாக நிரம்பியுள்ள நீர் நிலைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
மேலும் கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் அனைவரும் கரைக்கு திரும்பி விட்டார்களா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து இன்று காலை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார். மேலும்”1275″ மாநில பேரிடர் மீட்பு படையினர், காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் இருக்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் மழை காலங்களில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படவுள்ள மக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்ய போதிய மருத்துவ முகாம்கள் அல்லது நடமாடும் மருத்துவ குழுக்களை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
DINASUVADU